ETV Bharat / bharat

ஜாமின் கொடுத்த குஷி- சொகுசு காரில் ஊர்வலம் சென்ற ரவுடி!

ஜாமின் கிடைத்த மகிழ்ச்சியில் ரவுடி ஒருவர் சொகுசு காரில் வலம்வந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

author img

By

Published : Jul 13, 2021, 4:45 PM IST

Bootlegger holds rally
Bootlegger holds rally

சூரத் : குஜராத் மாநிலத்தின் சூரத் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடியின் கார் பேரணி தொடர்பான காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிவருகிறது.

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் ஈஸ்வர் வாஸ்புரியா. பிரபல ரவடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வழக்கொன்றில் கைதாகி ஈஸ்வர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈஸ்வர் ஜாமினில் வெளியே வந்தார்.

ஜாமின் கொடுத்த குஷி- சொகுசு காரில் ஊர்வலம் சென்ற ரவுடி!

இதை விழாவாக எடுக்க எண்ணிய அவரது ஆதரவாளர்கள் சொகுசு காரில் ஈஸ்வரை நிற்க வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். வெள்ளைச் சட்டையில் ஈஸ்வர் காருக்குள் நிற்க, கார் ஆடி அசைந்து யானை போல் நகர்ந்தது. மேலும், ஈஸ்வரின் காருக்கு முன்னாலும், பின்னாலும் கார்கள் அணிவகுத்து ஒன்றன் பின் ஒன்றாக நத்தைப் போல் ஊர்ந்து சென்றன.

இந்தக் காணொலி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஈஸ்வரின் பரோலை ரத்து செய்து, அவரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுகின்றன.

இதையும் படிங்க : ரவுடி ஓடஓட விரட்டி கொலை - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.