ETV Bharat / bharat

சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக் காவல் மனு ரத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 6:51 PM IST

Vijayawada ACB court rejected Chandrababu House custody petition: திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக் காவல் மனுவை விஜயவாடா நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

விஜயவாடா (ஆந்திரா): கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி, தெலுங்கு தேச கட்சித் தலைவரும், முன்னாள் ஆந்திரப் பிரதேச முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாடுக் கழகத்தின் மூலம் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 371 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக ஆந்திர சிஐடி காவல் துறையினரால் ஆந்திராவின் நந்தியாலா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

  • #WATCH | Vijayawada: On former Andhra Pradesh CM Chandrababu Naidu's house custody petition, Advocate General Ponnavolu Sudhakar Reddy says, "The court dismissed the petition for house custody..." pic.twitter.com/FVvmSckjGm

    — ANI (@ANI) September 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து, ஒரு நாள் முழுவதும் விசாரணை நடத்திய ஆந்திர சிஐடி காவல் துறையினர், கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் (செப்.10) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிஐடி காவல் துறையினர், தங்கள் தரப்பு ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். அது மட்டுமல்லாமல், சந்திரபாபு நாயுடுவை ஜாமீனில் கொண்டு வர அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

பின்னர் இந்த ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை செப்டம்பர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, அவர் ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து, சிறையில் உள்ள சந்திரபாபுவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்குமாறு சந்திரபாபுவின் வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா விஜயவாடா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, இரு நாட்களாக நடந்த வாதங்கள் நிறைவடைந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக் காவல் மனுவை விஜயவாடா நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கின்போது ஆந்திர சிஐடி காவல் துறை தரப்பில் ஏஜி பொன்னாவுலு சுதாகர் ரெட்டி ஆஜராகி இருந்தார்.

முன்னதாக, திறன் மேம்பாட்டுக் கழக ஊழலில் 300 கோடி ரூபாய் பணம் போலி ரசீதுகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஷெல் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக சிஐடி காவல் துறையினர் குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர். மேலும், இதுவரை நடந்த விசாரணையின்படி ஆறு திறன் மேம்பாட்டுக் குழுக்களுக்குத் தனியார் நிறுவனங்கள் செலவழித்த மொத்தத் தொகை, ஆந்திர அரசு மற்றும் ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அளிக்கப்பட்ட நிதியில் இருந்து மொத்தம் 371 கோடி ரூபாய் என தெரிய வந்து உள்ளதாக சிஐடி காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.