டெல்லி: கொரிய நாட்டை சேர்ந்தவரிடமிருந்து டெல்லி போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து, டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை, “இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், அந்த வீடியோவில் காணப்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. டெல்லி காவல்துறை, எத்தகைய ஊழலையும் பொறுத்துக் கொள்ளாது” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த போக்குவரத்து காவலர் வெளிநாட்டவரிடமிருந்து ரூ.5000 வாங்கி விட்டு அதற்கு, ரசீது கூட கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்த இந்த சம்பவம் முழுவதையும் அந்த கொரிய நாட்டவர், தனது காரில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் படம்பிடித்து உள்ளார். 1.34 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட பிரபல யூடியூபரான அவர், தனது யூடியூப் சேனலில் டெல்லி அவருக்கு நேர்ந்த சம்பவம் மற்றும் அவரது இந்தியா பயணம் குறித்த வீடியோக்களை பதிவேற்றி உள்ளார்.
-
1.34 मिलियन सब्सक्राइबर वाला कोरियन भ्राता दिल्ली घूमने आए तो क्या हुआ देखे:..
— Crime Free Delhi (@CrimeFreeDelhi1) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
कैसे एक गरीब पुलिस वाला बिना मशीन, पेन और कैमरा के चलान काटके देश का नाम रोशन कर रहा है।
दिल्ली की @g20org की पूरी तैयारी के लिए 🧵 थ्रेड देखे।@DelhiComplaint @LtGovDelhi @CPDelhi @ArvindKejriwal https://t.co/ge409Pn2ja pic.twitter.com/SFALm3bGqC
">1.34 मिलियन सब्सक्राइबर वाला कोरियन भ्राता दिल्ली घूमने आए तो क्या हुआ देखे:..
— Crime Free Delhi (@CrimeFreeDelhi1) July 21, 2023
कैसे एक गरीब पुलिस वाला बिना मशीन, पेन और कैमरा के चलान काटके देश का नाम रोशन कर रहा है।
दिल्ली की @g20org की पूरी तैयारी के लिए 🧵 थ्रेड देखे।@DelhiComplaint @LtGovDelhi @CPDelhi @ArvindKejriwal https://t.co/ge409Pn2ja pic.twitter.com/SFALm3bGqC1.34 मिलियन सब्सक्राइबर वाला कोरियन भ्राता दिल्ली घूमने आए तो क्या हुआ देखे:..
— Crime Free Delhi (@CrimeFreeDelhi1) July 21, 2023
कैसे एक गरीब पुलिस वाला बिना मशीन, पेन और कैमरा के चलान काटके देश का नाम रोशन कर रहा है।
दिल्ली की @g20org की पूरी तैयारी के लिए 🧵 थ्रेड देखे।@DelhiComplaint @LtGovDelhi @CPDelhi @ArvindKejriwal https://t.co/ge409Pn2ja pic.twitter.com/SFALm3bGqC
அந்த வீடியோவில், போக்குவரத்து காவலரை பார்த்து நலம் விசாரித்த கொரிய நாட்டவரை நிறுத்திய காவலர் “நீங்கள் தவறான வழியில் வந்து உள்ளதாக” கூறுகிறார். அதற்கு, அந்த வெளிநாட்டவரும், கூப்பிய கைகளுடன் மன்னிப்பு கேட்கிறார். அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துக் காவலர் வெளிநாட்டவரிடம், நீதிமன்ற அபராதமாக ரூ.5000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.
"கோர்ட் அபராதம், 5000 ரொக்கம்," என்று உடைந்த ஆங்கிலத்தில் வெளிநாட்டவரிடம் போக்குவரத்து காவலர் கூறுகிறார். "எவ்வளவு?" என அந்த வெளிநாட்டவர் மீண்டும், காவலரிடம் கேட்கிறார், அவர் "5000" என்று பதில் அளிக்கிறார். வாகன ஓட்டி, ரூ.500 நோட்டைக் கொடுக்கிறார், அதற்கு போலீஸ்காரர் “ரூ. 500 அல்ல ரூ.5000” என்று கூறுகிறார்.
-
https://t.co/GVY9mLhSNy
— Priya (@Miracle2204) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
At 21:40 the traffic police officer named "Mahesh Chand" a corrupted one didn't even give receipt to this foreigner and took Rs 5000 as fine.Please take some action against all of them. @dtptraffic @ArvindKejriwal @CPDelhi @narendramodi @nitin_gadkari pic.twitter.com/kiTH8T8vfH
">https://t.co/GVY9mLhSNy
— Priya (@Miracle2204) July 20, 2023
At 21:40 the traffic police officer named "Mahesh Chand" a corrupted one didn't even give receipt to this foreigner and took Rs 5000 as fine.Please take some action against all of them. @dtptraffic @ArvindKejriwal @CPDelhi @narendramodi @nitin_gadkari pic.twitter.com/kiTH8T8vfHhttps://t.co/GVY9mLhSNy
— Priya (@Miracle2204) July 20, 2023
At 21:40 the traffic police officer named "Mahesh Chand" a corrupted one didn't even give receipt to this foreigner and took Rs 5000 as fine.Please take some action against all of them. @dtptraffic @ArvindKejriwal @CPDelhi @narendramodi @nitin_gadkari pic.twitter.com/kiTH8T8vfH
பின்னர் வெளிநாட்டவர் சிறிது பணத்தை எடுத்து காவலரிடம் கொடுத்து உள்ளார். அதில் ரூ.5500 இருந்துள்ளது. தான் நேர்மையானவர் என காட்டிக் கொள்வதற்காக அந்த காவலர் அதிகப்படியாக இருந்த 500 ரூபாய் தாளை கொரிய நாட்டவரிடம் திருப்பி அளிக்கிறார். பின்னர் அவரிடம் கைகுலுக்கி விட்டு அவரிடம் அபராதம் பெற்றதற்கான ரசீது எதுவும் குடுக்காமல் சென்று விடுவது என முழு சம்பவமும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
கொரிய நாட்டவரிடம் பணம் பெற்ற அந்த போக்குவரத்து காவலர் மகேஷ் சந்த் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதுகுறித்த விசாரணையின் போது சந்த், பணம் செலுத்தியதற்கான ரசீதை தருவதாக கூறியதாகவும், ஆனால் கார் உரிமையாளர் அங்கிருந்து சென்று விட்டார் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வீடியோ ஒரு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காவலர் மகேஷ் சந்த் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "ஜனநாயக கோவிலை சீர்குலைக்க திட்டம்?" - துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்!