ETV Bharat / bharat

'வேற்றுமையில் ஒற்றுமை' தென்னிந்தியா குறித்து வெங்கையா நாயுடு புகழாரம் - இந்திய தொழில் கூட்டமைப்பு

தென்னிந்தியா ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு
author img

By

Published : Sep 23, 2021, 7:25 PM IST

‘‘ஆன்மிக தெற்கு, உலகளாவிய தொடர்புகள் உச்சிமாநாடு - 2025ம் ஆண்டுக்குள் ஒரு கோடி கோடி ரூபாய் (அதாவது, 1.5 டிரில்லியன் டாலர்) பொருளாதாரத்தை நோக்கி’ என்ற தலைப்பில் இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) நடத்திய நிகழ்ச்சியில் இன்று (செப்.23) காணொலி காட்சிமூலம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார்.

அப்போது, "இந்தியா இப்போது பொருளாதார வளர்ச்சியை மீண்டும் பெறுவதில் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் தொழில்துறை அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தென்னிந்தியா ‘வேற்றுமையில் ஒற்றுமை’ ('Unity in Diversity') என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கல்வி, கலாசாரம், சேவை ஆகியவற்றில் தென்னிந்தியா வேற்றுமையில் ஒற்றுமையோடு செயல்படுகிறது. தென்னிந்தியா 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி கோடி ரூபாய் (அதாவது, 1.5 டிரில்லியன் டாலர்) பொருளாதாரத்தை அடைவது நிச்சயம் சாத்தியமானது.

உற்பத்தி, விவசாய ஏற்றுமதி, டிஜிட்டல் சேவைகள், அடுத்த தலைமுறை நிதி திட்டங்கள், அதிக திறன் கொண்ட தளவாடங்கள், சக்தி, பகிர்வு பொருளாதாரம் மற்றும் நவீன சில்லறை விற்பனை ஆகியவற்றில் உலகளாவிய மையங்களை உருவாக்க வேண்டும். இந்திய பொருளாதாரத்தில், சேவைகள் துறை 54 விழுக்காடு இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது நடைபெறும் தடுப்பூசித் திட்டம் மூலம், சேவைகள் துறை மறுமலர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவின் வெற்றிக்கு சுயதொழில் எப்போதும் வலுவான காரணமாக இருந்து வருகிறது. இப்பகுதிகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. எளிதாகத் தொழில் தொடங்குவதற்கான தரவரிசையில் தென் மாநிலங்கள் முதலிடத்தில் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்" என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இதையும் படிங்க: போலீஸாருக்கு வார விடுமுறை - அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.