டெல்லி: நாட்டு மக்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், " அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். நமது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் பண்டிகையாக புத்தாண்டு உள்ளது. இந்த புத்தாண்டினை நாம் நம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் வரவேற்போம். 2020ஆம் ஆண்டு பெருந்தொற்று மூலமாக நமக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.
இந்த சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன், மன உறுதியுடன் இந்த புத்தாண்டை வரவேற்போம். இந்த 2021ஆம் ஆண்டு, நாம் மேலும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியாகமாகவும் வாழ்வதை உறுதி செய்வதுடன் அர்த்தமுள்ளதாகவும், அமைதியானதாகவும் இருக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு