கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா (81) ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவ.13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மேற்கு வங்க மாநிலம் பாங்குரா தொகுதியில் 9 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர், தொழிற்சங்க இயக்க முன்னோடி, மேற்கு வங்கத்திலிருந்து ஒன்பது முறை தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தை அலங்கரித்தவருமான மகத்தான தலைவர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா (81) மரணம்! #CPIM #RedSalute #Basudev_Acharya pic.twitter.com/3hAG6qgB1f
— CPIM Tamilnadu (@tncpim) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர், தொழிற்சங்க இயக்க முன்னோடி, மேற்கு வங்கத்திலிருந்து ஒன்பது முறை தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தை அலங்கரித்தவருமான மகத்தான தலைவர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா (81) மரணம்! #CPIM #RedSalute #Basudev_Acharya pic.twitter.com/3hAG6qgB1f
— CPIM Tamilnadu (@tncpim) November 13, 2023மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர், தொழிற்சங்க இயக்க முன்னோடி, மேற்கு வங்கத்திலிருந்து ஒன்பது முறை தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தை அலங்கரித்தவருமான மகத்தான தலைவர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா (81) மரணம்! #CPIM #RedSalute #Basudev_Acharya pic.twitter.com/3hAG6qgB1f
— CPIM Tamilnadu (@tncpim) November 13, 2023
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா முதன்முறையாக 1980-இல் பாங்குராவில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 வரை 9 முறை பாங்குரா தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும் நடிகையுமான மோனோ மூன் சென் என்பவரால் தோல்வியடைந்தார்.
பாசுதேவ் ஆச்சாரியா மேற்கு வங்கத்திலுள்ள புருலியா மாவட்டத்தில் 1942 ஜூலை 11-ஆம் தேதி பிறந்தார். அதன்பின் தனது மாணவப் பருவத்திலிருந்து இடதுசாரி அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பின் மாணவர் அரசியலிலிருந்து தொழிற்சங்க அரசியலுக்கு ரயில்வே துறையில் தொழிலாளர் இயக்கங்களின் முன்னணியாகத் தன்னை மாற்றிக் கொண்டார்.
-
The Polit Bureau of the Communist Party of India (Marxist) expresses its profound grief at the death of veteran communist, parliamentarian and trade union leader, Basudeb Acharia. pic.twitter.com/oq49yXPJLo
— CPI (M) (@cpimspeak) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Polit Bureau of the Communist Party of India (Marxist) expresses its profound grief at the death of veteran communist, parliamentarian and trade union leader, Basudeb Acharia. pic.twitter.com/oq49yXPJLo
— CPI (M) (@cpimspeak) November 13, 2023The Polit Bureau of the Communist Party of India (Marxist) expresses its profound grief at the death of veteran communist, parliamentarian and trade union leader, Basudeb Acharia. pic.twitter.com/oq49yXPJLo
— CPI (M) (@cpimspeak) November 13, 2023
மேலும், இவர் 9 முறை மக்களவை உறுப்பினராக இருந்த மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் பழங்குடியினர் அதிக அளவில் வசித்து வந்தனர். இவர் பாங்குரா பழங்குடியினரின் கல்வியில் தீவிரப் பங்கு வகித்துள்ளார். 2018-ஆம் ஆண்டு பஞ்சாயத்துத் தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களுடன் அணிவகுப்பில் ஈடுபட்ட போது அங்கு ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டுக் காயமடைந்தார் எனக் கூறப்படுகிறது.
தற்போது, பாசுதேவ் ஆச்சாரியாவின் மகள் வெளிநாட்டில் இருப்பதாகவும், நாளை (நவ.14) ஹைதராபாத் வருவார் என்றும், அதன் பின்பு அவரின் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: "மெய்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை" - மத்திய உள்துறை அமைச்சகம்!