பெங்களூர்: தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம் பெரும் நடிகை ஜெயந்தி. இவர் கடந்த 1963 ஆம் ஆண்டு 'ஜீனு கூடு' என்ற கன்னட மொழி படத்தின் மூலம் திரையுலகில் அவர் அறிமுகமானார்.
தமிழ் படங்களில் ஜெயந்தி
தமிழில் எம்ஜிஆருடன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் கண்ணா நலமா, வெள்ளிவிழா, புன்னகை, இருகோடுகள் உள்ளிட்ட படங்களை நடித்து புகழ் பெற்றார் ஜெயந்தி.
மேலும் பாலைவன பறவைகள், மனிதன், கோபாலா கோபாலா உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
கஸ்தூரி நிவாஷா, மிஸ் லீலாவதி, ஸ்ரீ கிருஷ்ணதேவராய, இட காலு குடாட மேலி உள்ளிட்டவை இவர் நடித்த படங்கள் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றன.
7 முறை விருதுகள்
‘தனது சிறந்த நடிப்புக்காக ஏழு முறை கர்நாடக மாநில விருதுகளை ஜெயந்தி வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆஸ்துமா நோயால் ஜெயந்தி அவதிப்பட்டு வந்த ஜெயந்தி இன்று காலமானார். அவருக்கு வயது 76. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :மகேந்திரன் - மௌனத்தை மொழியாக்கியவர்