இந்திய சுதந்திர நாளின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தண்டி யாத்திரை நினைவு விழா கொண்டாடப்பட்டது. குஜாரத் மாநிலம் அகமதாபாத்தின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் தண்டியில் நிறைவடைந்தது. அதன் இறுதி நாளான நேற்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நிறைவுரையாற்றினார்.
அதில், 1947இல் தொடங்கிய இந்தப் பயணம், அனைவருடன் சேர்ந்த அனைவருக்குமான வளர்ச்சி என்ற கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பலவற்றை நாம் எட்டியுள்ளோம். இந்த நேரத்தில் நான் ஒன்றை உறுதியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
சுதந்திர நாளின் நூற்றாண்டு கொண்டாட்டம் 2047ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது. அதற்குள் நாம் நிச்சயம் நமது கனவான புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றார். அதற்காக தேசத் தலைவர்களான காந்தி, சர்தார் பட்டேல் வழியில் பயணிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி - இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை