ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி அவதூறு பேச்சு; சபாநாயகர் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் கோரிக்கை! - நாடாளுமன்ற சிறப்பு அமர்வு

VCK founder urges Speaker: நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்பி ரமேஷ் பிதுரி அவதூறாக பேசியதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

VCK founder Thirumavalavan urges Speaker to initiate case against Ramesh Bidhuri for hate speech
திருமாவளவன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 6:15 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத் தொடரில் சந்திரயான்3 வெற்றி குறித்து விவாதித்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலிக்கு எம்பி (Danish Ali) எதிராக, பாஜக எம்பி ரமேஷ் பிதுரி பேசிய அவதூறு பேச்சுக்கு (derogatory statements) சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும், ரமேஷ் பிதுரி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, அவரது பேச்சினை அவைக் குறிப்பில் இருந்தும் நீக்கினார்.

ரமேஷ் பிதுரியின் அவதூறு பேச்சிற்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரமேஷ் பிதுரியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது ‘வெறுக்கத்தக்க பேச்சு’ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மக்களவை அமர்வின் போது ரமேஷ் பிதுரி கூறிய கருத்துக்கள், மக்களவையின் புனிதத்தை அப்பட்டமாக புறக்கணித்தது மட்டுமல்லாமல், நமது மதிப்பிற்குரிய அவையில் உள்ள சிறப்புரிமையை கடுமையாக மீறுவதாகவும் உள்ளது என திருமாவளவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புண்படுத்தும் நோக்கத்தில் பேசப்பட்ட இந்த வெறுக்கத்தக்க பேச்சால், உரிமையின் வரம்புகளை மீறியது மட்டுமல்லாமல் மிகவும் வெட்கக்கேடானதாகவும் உள்ளது. சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பிதுரியின் அறிக்கை குறித்து சிறப்புரிமைக் குழு விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.

அவரது இந்த வெறுப்பு பேச்சுக்கு அவருக்கு எதிராக ஒரு வழக்கைத் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் இந்த விஷயத்தில் உங்கள் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை மிகவும் முக்கியமானது எனவும் திருமாவளவன் அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை (செப்.22) அலி தனக்கு எதிரான பிதுரியின் அறிக்கையை "வெறுக்கத்தக்க பேச்சு" என்று குறிப்பிட்டு, சிறப்புரிமைக் குழுவின் விசாரணையைக் கோரி சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார். வியாழக்கிழமை (செப்.21) அன்று சந்திரயான்-3 வெற்றி குறித்த விவாதங்களின்போது அவதூறாக பேசிய பாஜக எம்பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவேன் என்று டேனிஷ் அலி பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "மகளிர் இட ஒதுக்கீடு" பிரதமர் மோடி அரசின் வரலாற்று சாதனை - வானதி சீனிவாசன் பெருமிதம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.