பாஜக எம்.பி வருண்காந்தி, அண்மைக்காலமாக தனது சொந்த கட்சியான பாஜகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து மத்திய பாஜக அரசை விமர்சித்து, வருண் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள புள்ளி விவரங்கள், நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் நிலைமை எடுத்துக் கூறுகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 22 கோடி இளைஞர்கள் மத்திய அரசுத் துறைகளில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அதில் 7 லட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். நாட்டில் சுமார் ஒரு கோடி பணியிடங்கள் காலியாக இருக்கும்போது, இந்த வேலையில்லா திண்டாட்டத்திற்கு யார் பொறுப்பு?" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மேற்கு வங்கம்: கைது செய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம்