ETV Bharat / bharat

அதிவேக வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்... 180 கி.மீ வேகத்தை எட்டி சாதனை...

author img

By

Published : Aug 27, 2022, 1:16 PM IST

அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சோதனை ஓட்டத்தின்போது 180 கிமீ வேகத்தைக் கடந்து சாதனை புரிந்தாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

180 கிமீ வேகத்தில் விரைந்த வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம்

கோட்டா (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா - நாக்டா வழித்தடம் இடையே வந்தே பாரத் 2 ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதுகுறித்த வீடியோவினை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வானி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் வந்தே பாரத் ரயில் 180 கி.மீ. வேகத்தை கடந்துள்ளது.

இந்த ரயிலின் சோதனை ஓட்டம் 50,000 கி.மீ. அடைந்ததும் பயன்பாட்டிற்கான ஒப்புதல் ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் கோரப்படும். வரும் 2023ஆம் ஆண்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ரயிலின் சிறப்பு அம்சங்கள்: இந்த வந்தே பாரத் ரயில்களில் தானியங்கி தீ சென்சார்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட உயர் ரக கருவிகள் உள்ளன. ரயில் பெட்டிகள் துருப்பிடிக்காத எஃகு மூலம் செய்யப்படுகின்றன. அதிக வேகத்தில் சென்றாலும் பயணிகள் வசதியாகவே உணரும்படி குறைந்த எடையில் உருவாக்கப்படுகின்றன.

ஜன்னல்கள் அகலமாக உள்ளன. பயணிகளின் பொருள்களை பாதுகாப்பாகவும், அதிகமாகவும் வைப்பதற்கான இட வசதி கொடுக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை வைக்கப்படுகின்றன.

பயணிகளின் பாதுகாப்பிற்காக, அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் 'கவச்' தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது. இந்த ரயில் மணிக்கு 200 கிமீ வேகத்தைத் தொடும் அளவிலான திறன் கொண்டது. இரண்டு வந்தே பாரத் ரயில்கள் டெல்லி - வாரணாசி மற்றும் டெல்லி - வைஷ்ணோதேவி கத்ரா இடையே இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை ஜெர்மனியில் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.