நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்கு ரூ.60 கோடியா! அப்படி என்ன விஷேசம்? - Vande Bharat train
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று கானொளி மூலம் துவக்கி வைத்தார். இந்த ரயிலில் பயணிகளின் பாதுகாப்புக்காக 60 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. இந்த ரயிலில் உள்ள 8 பெட்டிகளிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. மேலும், ரயிலில் பல சிறப்பம்சங்கள் உள்ளன என ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விளக்கினார்.
Published : Sep 25, 2023, 10:50 AM IST
டெல்லி: வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று (செப். 24) காணொளி மூலம் துவக்கி வைத்தார். இந்த ரயிலானது இரு கோச்களின் அடிப்படையில் எட்டு பெட்டிகளுடன் 530 பயணிகள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த 8 பெட்டிகளுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு ஆன மொத்த செலவு 60 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிற்குள் மட்டும் பயணிக்கும் 2ஆவது வந்தே பாரத் ரயில், நெல்லை - சென்னை வரை இயக்கப்படுகிறது. முதல் ரயில் சென்னை - கோவை வரை இயக்கப்படுகிறது. இந்த நிலையில் வந்தே பார்த் ரயிலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறுகையில், "இந்த வந்தே பாரத் ரயிலானது பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த ரயிலானது புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டு மற்ற ரயில்களைக் காண்பதில் இருந்து வித்தியாசமாக இருக்கும். பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. முன்னதாக, ரயில் ஓட்டுநர் மற்றும் கடைசி பெட்டியில் இருக்கும் கார்டு பேசுவதற்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது வந்தே பாரத் ரயிலில், ரயில் ஓட்டுநர் காவலரிடம் திரைப்பகுதியில் உள்ள நேரடி மைக் மூலம் பேசும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ரயிலில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கும் போதும் சில பயணிகள் தடையை மீறி கழிவறையில் புகை பிடிக்கிறார்கள். இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகின்றன. அது மட்டுமன்றி நோய்கள் பரவுகின்றன. இந்த குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அதை தடுக்கும் வகையில் வந்தே பாரத் ரயிலில் அதி நவீன உணர்திறன் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டு புகைபிடிப்பவர்க்கு உடனடியாக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு தக்க நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும், அனைத்து கதவுகளும் மூடப்பட்டவுடன் மட்டுமே ரயிலானது நகரும். இந்த ரயிலின் அனைத்து நடவடிக்கைகளையும் கவனிக்கப்படுகிறது.
ரயில் தொடங்குவதற்கு முன், ஆயில் மற்றும் பிரேக் லிவர் சோதனை செய்தல் மற்றும் உடையும் தருவாயில் இருக்கும் பொருட்களை கண்காணித்த பிறகு ரயிலானது இயக்கப்படும். எனவே பயணிகள் அச்சம் கொள்ள தேவை இல்லை. இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் 160 கிலோ மீட்டர் ஆகும்.
பயணிகள் இயற்கையை ரசிப்பதற்காக மற்ற ரயில்களை விட கால் இன்ச் அளவிற்கு ஜன்னல்கள் பெரியதாக இருக்கும். வயதான மற்றும் உடல் ஊனமுற்றோருக்கேன சக்கர நாற்காலிகளும் வழங்கப்படுகின்றன. மற்ற ரயில்களில் அவசரமாக ரயிலை நிறுத்த ஜெயின் போன்ற அமைப்புகள் பெட்டிகளில் இருக்கும் இந்த ரயிலில் டாக் பேக் யூனிட்டியில் ஒரு பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க:Ind Vs Aus 2nd ODI : அதிரடியான பந்துவீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா.. தொடரைக் கைப்பற்றிய இந்தியா!