ETV Bharat / bharat

52 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ.வேகம்... விமானத்தில் கிடைக்கும் வசதிகள்... வந்தே பாரத் ரயில் சிறப்பம்சங்கள்... - vande bharat express gandhinagar to mumbai

குஜராத் மாநிலம் காந்திநகர் ரயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 52 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ.வேகம் எட்டும் இந்த ரயிலில் விமானத்தில் கிடைக்கும் வசதிகள் உள்ளன. அதுகுறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

vande-bharat-express-specification
vande-bharat-express-specification
author img

By

Published : Sep 30, 2022, 6:11 PM IST

குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையம் வரை அந்த ரயிலில் பயணம் செய்தார். அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உடன் இருந்தனர்.

இதனிடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின், 2.0 ரயில் பெட்டிகள் உள்ளிட்டவையை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அதன் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது ரயில்வே ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள் உட்பட சக பயணிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், காந்திநகர் மற்றும் மும்பை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவின் இரண்டு வணிக மையங்களுக்கிடையேயான இணைப்பை அதிகரிக்கும். இது குஜராத்தில் இருந்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மும்பைக்கு பயணிக்க உதவும், மேலும் விமானத்தில் கிடைக்கும் வசதிகளைப் போல குறைந்த செலவில் மும்பைக்கு பயணிக்க இது உதவும் எனத் தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.

  • காந்திநகரில் இருந்து மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் 6-7 மணிநேரத்தில் வந்தடையும்.
  • விமானப்பயணத்தின் பயண அனுபவங்களை வழங்குகிறது. அந்த அளவிற்கு இரைச்சலோ, அதிர்வோ கிடையாது.
  • இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயிலாகும்.
  • மோதல் தவிர்ப்பு அமைப்பு - கவாச் உள்ளிட்ட மேம்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
  • வந்தே பாரத் 2.0 ரயில், 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டுகிறது.
  • அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்வது போன்ற மேம்பட்ட அம்சங்களை கொண்டது.
  • இந்த ரயில் மற்ற ரயிலின் 430 டன் எடையுடண் ஒப்பிடும் போது 392 டன் எடை கொண்டதாக இருக்கும்.
  • இது தேவைக்கேற்ப Wi-Fi உள்ளடக்க வசதியையும் கொண்டிருக்கும்.
  • ஒவ்வொரு பெட்டியிலும் 32 இன்ச் திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் பயணிகளுக்கு தகவல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் வழங்கப்படும்.
  • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
  • முன்பு எக்சிகியூட்டிவ் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த பக்கவாட்டு சாய்வு இருக்கை வசதி இப்போது அனைத்து வகுப்புகளுக்கும் கிடைக்கும்.
  • எக்ஸிகியூட்டிவ் கோச்சுகளில் 180 டிகிரி சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன
  • வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய வடிவமைப்பில், காற்றைச் சுத்திகரிப்பதற்காக கூரை-மவுண்டட் பேக்கேஜ் யூனிட்டில் புகைப்பட-வினையூக்கி புற ஊதா காற்று சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
  • சண்டிகரில் உள்ள மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு பரிந்துரைத்தபடி, இந்த அமைப்பு ஆர்எம்பியூ-வின் இரு முனைகளிலும் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டு, கிருமிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

இதையும் படிங்க: மீண்டும் உயர்ந்த ரெப்போ வட்டி விகிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.