புதுச்சேரி : கரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்திவருகிறது. ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்ற அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் இன்று (ஜூலை.09) முதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ராஜீவ் காந்தி குழந்தைகள், மகளிர் மருத்துவமனையில் இதற்கான முகாமை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன், ”கரோனா நோய்த்தொற்றை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு வழிகாட்டுதல்படி கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்ற அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் இன்று (ஜூலை.09) தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தட்டுப்பாடு புதுச்சேரியில் இல்லை
அனைத்து கர்ப்பிணி பெண்களும் மூன்று மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்களுக்குள்தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாளை(ஜூலை.10) முதல் சிறப்பு தடுப்பூசி திருவிழா நடத்தப்படவுள்ளது. புதுச்சேரியில் 68 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதால் தடுப்பூசி தட்டுப்பாடு புதுச்சேரியில் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: