ETV Bharat / bharat

தேர்தலில் தோல்வியுற்றாலும் புஷ்கர் சிங் தாமி பாஜகவின் முதலமைச்சர் தேர்வானது எப்படி?

author img

By

Published : Mar 22, 2022, 4:02 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்-அமைச்சராக புஷ்கர் சிங் தாமி புதன்கிழமை (மார்ச் 23) மாலை 3.30 மணிக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறார். தேர்தலில் தோல்வியுற்ற நிலையிலும் புஷ்கர் சிங் தாமி, பாஜகவின் முதலமைச்சர் தேர்வானது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

Pushkar Singh Dhami
Pushkar Singh Dhami

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில் உள்ள அணிவகுப்பு (பரேடு) மைதானத்தில் நாளை (மார்ச் 23) மாலை 3.30 மணிக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக புஷ்கர் சிங் தாமி பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மீனாட்சி லேகி மற்றும் மாநில பாஜக பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலை பாஜக, மாநிலத்தின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் சந்தித்தது. இந்நிலையில், காதிமா தொகுதியில் போட்டியிட்ட புஷ்கர் சிங் தாமி, எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்துவிட்டார்.

2012ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் போட்டியிட்டுதான் தாமி வெற்றிப் பெற்றிருந்தார். அவரின் தோல்வி பாஜக உள்பட எதிர்க்கட்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சீன எல்லையில் 100 அடி உயர மூவர்ணக்கொடி

ஏனெனில் மாநிலத்தில் பாஜக மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மையை பெற்றது.

முன்னதாக சட்டப்பேரவை தேர்தலின்போது பரப்புரையில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங், “புஷ்கர் சிங் தாமியை கிரிக்கெட் வீரர் தோனியுடன் ஒப்பிட்டு பேசினார்”. அப்போது பேசிய அவர், “கிரிக்கெட் வீரர் தோனியை போன்று ஆட்டத்தை சுமூகமாக முடித்து வைப்பதில் தாமியும் வல்லவர்” என்றார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை (மார்ச் 21) மாநிலத்தின் முதல்-அமைச்சராக புஷ்கர் சிங் தாமி பாஜகவால் மீண்டும் அறிவிக்கப்பட்டார். கடந்த காலங்களில் உத்தரகாண்ட் பாஜக பல்வேறு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஒரு ஆண்டுக்குள் இரண்டு முதல்-அமைச்சர்களை அறிமுகப்படுத்தியது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்

அந்த வகையில் 2021ஆம் ஆண்டில் மட்டும் உத்தரகாண்டில் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் தீரத் சிங் ராவத் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வந்த வேகத்தில் ராஜினாமா செய்தனர்.

இவர்களுக்கு பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட புஷ்கர் சிங் தாமி, சர்ச்சையில் சிக்காத முதலமைச்சராக காணப்பட்டார்.

அதே நேரத்தில் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்திவிட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : உத்தரகாண்டில் உடனடியாக பொது சிவில் சட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.