ரூர்க்கி: உத்தர காண்ட் மாநிலத்தில், நேற்றிரவு(ஜூன் 24) பெண் ஒருவர் தனது ஆறு வயது மகளுடன் காளியாரிலிருந்து ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் கார் ஒன்றில் லிஃப்ட் கேட்டுள்ளார். இந்த காரிலிருந்த மர்மநபர்கள் சிறுமியையும், தாயையும் காரில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், இருவரையும் கங்கை நதிக்கரை அருகே விட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பகீர் வீடியோ... கண்ணிமைக்கும் நேரத்தில் செயின் பறிப்பு...