உத்தரகாண்ட் மாநிலத்தின் புரோலா சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவர் இணைந்துள்ளார்.
இந்த இணைப்பு விழாவில் உத்தரகாண்ட் முதலமைச்சர் பூஷ்கர் சிங் தாமியும் உடனிருந்தார். கடந்த சில மாதங்களாகவே ராஜ்குமார் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே இவர் பாஜகவில் இருந்த நிலையில் 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இணைந்தார்.
இதையும் படிங்க: குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு