டேராடூன்: உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு 2012ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தற்போதைய அமைச்சர் டாக்டர். ஹரக் சிங் ராவத் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அரசு அலுவலரிடம் மோசமாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, “அரசு அலுவலர்களிடம் மோசமாக நடந்துகொண்ட ஹரக் சிங் ராவத் -துக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
2012ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில், சரியாக 8 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் ஜெயில் தண்டனை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’பிகார் தேர்தல் முடிவுகள் திமுகவை பாதிக்காது’