ஃபதேபூர் (உத்தரப் பிரதேசம்): உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆன பிறகும்கூட, உரிய தண்டனை கிடைக்கப்பெறவில்லை.
ஃபதேபூர் மாவட்டத்தின் ஜாபர் கஞ்ச் பகுதியில் சில ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சிறுமி, சமீபத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால் குற்றவாளிகள் இன்னும் வெளியே சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஜூன் மாதம் புகார் தெரிவித்த நிலையில், வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. ஆனால், குற்றவளிகள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.
இது குறித்து காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் கூறுகையில், "இந்த வழக்கில் ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளனர், அதனால் அவர்களைக் கைதுசெய்ய முடியவில்லை" என்றார்.
![Uttar Pradesh rape survivor awaits justice even after six months](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9787009_614_9787009_1607274412648.png)
மேலும் அவர், டிஎன்ஏ சோதனை நிலுவையில் உள்ளது என்றும், தொடர்ந்து இது குறித்த விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.