உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை அம்மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி (பஞ்சாயத்து) அமைப்புகளுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 15ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 19ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் ஏப்ரல் 26ஆம் தேதியும் இறுதிக் கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வெள்ளோட்டமாக இந்தத் தேர்தல் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்முறையாக புதிய போயிங் ரக விமானத்தில் பயணம்செய்த மோடி