லக்னோ: உத்தரப் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு திங்கள்கிழமை (ஏப்.11) ஹேக் செய்யப்பட்டது. முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு தேவையில்லாத பதிவுகள் பதிவிடப்பட்டன. இந்தப் பதிவுகள் சிறிது நேரத்தில் நீக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக லக்னோ சைபர் க்ரைம் போலீசார் குற்ற வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதலமைச்சர் ட்விட்டர் கணக்கை தொடர்ந்து, அரசின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடக்கம்!