ETV Bharat / bharat

’எல்லாம் இந்த வரலாற்று ஆசிரியர்களால் வந்தது...’ - முகலாய அரசர் அக்பர் மீது யோகி காட்டம்!

’அக்பர், த க்ரேட்’ என முகாலாய அரசர் அக்பரைப் புகழ்ந்த வரலாற்றாளர்கள், மகாராணா பிரதாப் குறித்து எதுவும் குறிப்பிடாமல் விட்டுவிட்டனர் என, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரலாற்று ஆசிரியர்களை சாடியுள்ளார்.

யோகி
யோகி
author img

By

Published : Sep 20, 2021, 2:08 PM IST

அயோத்தியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் மோர்ச்சாவின் (செல்) மூன்று நாள் செயற்குழு கூட்டத்தின் நிறைவு நாளில் பேசிய யோகி ஆதித்யநாத், முந்தைய நிர்வாகங்கள் சாதியின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்திச் சென்றுள்ளன என சாடினார்.

தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி புரிந்த முந்தைய அரசுகளை சாடிய அவர், நிஷத்ராஜ், மகாராஜ் சுஹெல்தேவ், மஹாராணி லக்ஷ்மிபாய், சிவாஜி மகாராஜ், மஹாராணா பிரதாப், ஜல்கரி போன்ற தலைவர்கள் வழங்கிய வளர்ச்சிப் பாதையில் தனது அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் ஒரு சமூகத்தை துணை சாதி மற்றும் குழுக்களாகப் பிரித்ததே அதன் சிதைவுக்கு வழிவகுத்தது என்று கூறிய யோகி, எதிர்க்கட்சிகள் பிற்படுத்தப்பட்டோர் பெயரில் அரசியல் செய்வதாகவும், சமூகத்துக்காக எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

”சமூகம் பிளவுபட்டதால் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதில் வெற்றி பெற்றனர். ஆனால் இப்போது சமூகம் அதன் எதிரிகளுக்கு கடினமான நேரத்தைக் கொடுத்து ஒன்றுபட்டுள்ளது” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

லட்சுமி, விநாயகக் கடவுள் சிலைகள், சீனா போன்ற நாத்திக நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கண்டனம் தெரிவித்த யோகி, கரோனா காலத்தில், சிலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே, மாநிலத்தில் மதி கலா வாரியம் அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 115 நாடுகளில் இருந்து அயோத்தி ராமர் கோயில் வந்தடைந்த புனித நீர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.