வாஷிங்டன்: கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நாடுகளிலும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சேவையை ரத்து செய்த விமானங்கள், பயணிகளுக்கு பணத்தை திருப்பி செலுத்தின. அந்த வகையில், விமான டிக்கெட்களை ரத்து செய்த மற்றும் பயணங்களில் மாற்றம் செய்த பயணிகளுக்கு தொகையை திருப்பி தருவதில் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் அதிக காலம் எடுத்துகொண்டதாக கூறப்படுகிறது.
ரீஃபண்ட் கோரி அனுப்பப்பட்ட புகார்களில் பாதியளவை கையாளவே ஏர் இந்தியா நிறுவனம் 100 நாட்களுக்கும் மேல் எடுத்ததாக தெரிகிறது. இந்த கால தாமதத்திற்காக 1.4 மில்லியன் டாலரை அபராதமாக செலுத்த வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் பயணிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய 121.5 மில்லியன் டாலரை உடனடியாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் ரீஃபண்ட் செய்ய கால தாமதம் செய்ததாக, ஃபிரான்டியர், ஏரோ மெக்சிகோ, இஐ ஏஐ, ஏவியன்கா உள்ளிட்ட விமான நிறுவனங்களுக்கும் அமெரிக்க போக்குவரத்துதுறை அபராதம் விதித்துள்ளது.
ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதிக்க காரணமாக புகார்கள், ஏர் இந்தியாவை டாடா குழுமம் கையகப்படுத்துவதற்கு முன்பு கொடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூகுளுக்கு ரூ.3200 கோடி அபராதம்; இருப்பிட தரவு கண்காணிப்பு வழக்கில் அதிரடி!