டெல்லி : நாணயத்தின் இரு பக்கங்களை போன்று இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கனவு உள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்து உள்ளார்.
டெல்லி ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து நினைவு கூர்ந்தார். இந்தியாவின் கனவும் அமெரிக்காவின் கனவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதால் இரு நாடுகளுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளதாக கூறினார்
இரு நாடுகளும் ஒரே நோக்கத்தை பகிர்ந்து கொள்வதாகவும் அமெரிக்க மக்கள் சமூகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு இடையே வெற்றியை அடைய விரும்புவதாகவும் கூறினார். புதிய வாய்ப்புகள், புதிய அறிவு மற்றும் மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்புகளை இரு நாடுகளும் சாத்தியாவதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
உலகை நாம் கண்டுபிடித்ததை விட சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க விரும்புவதாகவும் நமது சொந்த நாடுகளுக்கும் மட்டுமல்லாமல் அனைவருக்குமான உலகத்தை உருவாக்க விரும்புவதாகவும் கூறினார். கனவுகள் ஒவ்வொறு நாளும் நினைவாகும் நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி குறித்து பேசிய அவர், இந்தியாவில் தேநீர் விற்கும் சிறுவன் ஒருவன் உலக அரங்கில் தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு வளர்ந்து உள்ளதாக கூறினார். இந்தியாவில் சந்தால் சமூகத்தை சேர்ந்த ஆசிரியர் தனது நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து உள்லார் என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா தனது தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் வாழ்க்கை நடைமுறையை மேம்படுத்தி மக்களை வறுமையில் இருந்து மீட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான தொடர்பு என்பது உறவு மற்றும் நட்பின் அடிப்படையில் மிகவும் தனிப்பட்டது என்றும் நாற்பது லட்சத்திற்கும் அதிகமான பலம் வாய்ந்த புலம்பெயர் சமூகத்தால் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார், மேலும் கல்வி மற்றும் வணிக தொடர்புகள், ஒவ்வொருவரின் கலாச்சாரங்கள் மீதான புரிந்துணர்வு ஆகியவற்றின் மூலம், பகிரப்பட்ட அனுபவத்தால் இரு நாடுகளிடையே நட்பு வளருவதாக அவர் கூறினார்.
உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான பிணைப்பின் நம்ப முடியாத தன்மையின் கொண்டாட்டத்தை தான் கண்டதாகவும் அமெரிக்க அதிபர் பைடன் கூறியது போல், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு 21ஆம் நூற்றாண்டின் எல்லையற்ற உறவு போன்றது என்று கூறினார்.
இதையும் படிங்க : ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் பணம்... மக்கள் குஷி! எங்க தெரியுமா?