வாஷிங்டன்: ஆந்திர மாநிலம், கர்னூல் நகரை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவெளி பெண் ஜான்ஹவி கந்துல்லா, வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் நகரில் உள்ள கல்லூரியில் முதுகலைப் படித்து வருகிறார். இந்நிலையில் சவுத் லேக் யூனியன் பகுதி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
ஜான்ஹவி சாலையைக் கடக்க முயன்ற நிலையில் அந்த வழியாக வேகமாக வந்த போலீஸ் வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் ஜான்ஹவி தூக்கி வீசப்பட்டார். மோசமான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜான்ஹவிக்கு முதலுதவி செய்த போலீசார் அருகில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜான்ஹவி, சிறிது நேரத்தில் சிசிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சாலையைக் கடக்க முயன்றபோது போலீஸ் வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக சியாட்டல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உலகின் முதல் மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்து - இந்தியாவில் அறிமுகம்.!