டெல்லி: இந்திய ரயில்வே மேலாண்மை சேவை பணிக்கான ஆட்சேர்ப்பு அடுத்தாண்டு முதல் யுபிஎஸ்சியால் நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்திய ரயில்வே மேலாண்மை சேவை தேர்வு (IRMSE) இரண்டு அடுக்கு தேர்வாக நடத்தப்படும்(முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்). ஐஆர்எம்எஸ் (முதன்மை) எழுத்துத் தேர்வில் தகுதி பெறும், தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களும் சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வில் பங்கேற்க வேண்டும்.
ஐஆர்எம்எஸ் (முதன்மை) தேர்வு நான்கு தாள்களைக் கொண்டிருக்கும், பாடதொகுப்புகளில் வழக்கமான கட்டுரை வகை கேள்விகள் இடம்பெறும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல முதல் தேர்வு 300 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும், அதாவது விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கும் இந்திய மொழிகளில் ஒன்றின் தாள் ஏ மற்றும் ஆங்கில மொழியில் உள்ளது தாள் பி என இரண்டு தாள்கள் இடம்பெறும்.
விருப்ப பாடங்களில் தலா 250 மதிப்பெண்களுக்கு இரண்டு தாள்கள் இருக்கும். 100 மதிப்பெண்களுக்கு ஆளுமைத் தேர்வும் நடத்தப்படும். சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், காமர்ஸ் மற்றும் அக்கவுண்டன்சி ஆகியவை விருப்ப பாடங்கள் ஆகும். மேற்கூறிய தகுதித் தாள்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு (சிஎஸ்இ) ஒரே மாதிரியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TNPSC: டிச.26-ல் சிறை அலுவலர் பணி தேர்வு!