டெல்லி: ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி) தலைவர் உபேந்திர குஷ்வாஹா விரைவில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிகார் சட்டப்பேரவை தேர்தல் வெளியான அன்றே முதலமைச்சர் நிதிஷ் குமாரை ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி) தலைவர் உபேந்திர குஷ்வாஹா சந்திக்க இருந்தார்.
இந்நிலையில் அவருக்கு கல்வி அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் உபேந்திரா குஷ்வாஹா, நிதிஷ் குமார் கருத்துகளுடன் வேறுபட்டு காணப்பட்டார்.
ஆனால் தற்போது அவர் நிதிஷ் குமாரை ஆதரித்துவருகிறார். மேலும் பிகார் அரசியலில் நீடிக்க உபேந்திரா குஷ்வாஹா -வுக்கு நிதிஷ் குமாரின் ஆதரவும் தேவைப்படுகிறது. மேலும், இந்த இணைப்பு சாத்தியமாகும்பட்சத்தில் பிகார் அரசியலில் திருப்புமுனை ஏற்படலாம்.
ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி) தலைவர் உபேந்திர குஷ்வாஹா 2014ஆம் ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து செயல்பட்டார்.
அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கூட்டணி முறிவுக்கு பிறகு ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் உபேந்திரா குஷ்வாஹா அங்கம் வகித்தார்.
தற்போது அவர் மீண்டும் நிதிஷ் குமாருடன் இணைய உள்ளார். இதனால் பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியவை வலிமை பெறும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிஎம் கிஷான் திட்டத்தை தடுப்பது ஏன்? மம்தா பானர்ஜிக்கு நரேந்திர சிங் தோமர் கடிதம்!