ETV Bharat / bharat

காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொலை - jammu kashmir

ஜம்மு- காஷ்மீரில் நேற்று (ஆகஸ்ட் 11) நடந்த துப்பாக்கிச்சூட்டில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Etv Bharatகாஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொலை

author img

By

Published : Aug 12, 2022, 10:20 AM IST

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் நேற்று (ஆகஸ்ட் 11) நள்ளிரவில் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் விசாரணையில் கொல்லப்பட்ட தொழிலாளி பீகாரைச் சேர்ந்த முகமது அம்ரீஸ் என தெரியவந்தது.

பயங்கரவாதிகளால் சுடப்பட்ட முகமது அம்ரீஸ் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அவரை ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சிகிச்சைக்கு செல்லும் போது வழியிலேயே இறந்துவிட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் தொழிலாளி இறந்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இறந்த தொழிலாளி அப்பகுதியில் படுக்கைகள் செய்து வந்தார்.

இதையும் படிங்க:'10 நாளுக்கு முன்னாடி தான் எங்களைப் பார்த்துட்டு போனான்...' வீரமரணம் அடைந்த லட்சுமணனின் தாய் வேதனை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.