இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவேக்ஸின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஒரு மாத கால அளவிற்குமேல் தான் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
20 பேருக்கு மாறிய தடுப்பூசிகள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தர்த் நகர் மாவட்டத்தில் பர்ஹானி பகுதியில் 20 பேருக்கு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸாக செலுத்தப்பட்ட நிலையில், இவர்களுக்கு மே 14ஆம் தேதி இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான், அங்கிருந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் கோவிஷீல்டுக்குப் பதிலாக கோவேக்ஸின் தடுப்பூசியை மாற்றி செலுத்தியுள்ளனர்.
அலுவலர்களின் இந்த கவனக்குறைவான நடவடிக்கை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங்கிற்கு தெரிவிக்கப்படவே, அவர் இதுகுறித்து விசாரிக்க உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.
மாற்றி தடுப்பூசி செலுத்தப்பட்ட 20 பேருக்கும் இதுவரை எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ’தில் இருந்தா அரெஸ்ட் பண்ணுங்க’ - சவால் விடும் பாபா ராம்தேவ்!