ETV Bharat / bharat

முன்னாள் எம்பி ஜெய பிரதாவை கைது செய்ய நீதிமன்றம் ஆணை! - jeya pradha

முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜெய பிரதாவை கைது செய்ய உத்தரப் பிரதேசம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜெயப் பிரதாவை பிணையின்றி கைது கைது செய்ய உத்தரவு

author img

By

Published : Dec 22, 2022, 9:43 AM IST

பரேலி: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரதாவை 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் ஜெய பிரதாவுக்கு பிணையில் வெளிவரமுடியாத கைது ஆணை பிரப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் அமர்நாத் திவாரி, "இந்த வழக்கை வரும் ஜன.9 ஒத்திவைத்து, தொடர்ந்து ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறுவதால் இந்த வழக்கில் அவரை பிணையில்லாமல் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

நடிகையாக இருந்து அரசியலில் குதித்த ஜெய பிரதா இதற்கு முன்பு சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அஸம் கானிடம் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகளின் குழந்தை ஆசையை பூர்த்தி செய்ய பெற்றோர் செய்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.