ETV Bharat / bharat

மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மருமகன் - உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் மாமியாரை இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.

Etv Bharatமாமியாரை பெட்ரோல் எரித்துக் கொன்ற மருமகன் - உபியில் அதிர்ச்சி

author img

By

Published : Oct 30, 2022, 7:38 AM IST

Updated : Oct 30, 2022, 9:34 AM IST

சஹாரன்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நேற்று (அக்.29) நிதின் என்பவர் அவரது மாமியார் பயல்( 45) மற்றும் அவரது மனைவி ரித்திகா (20) ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பயல் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். ரித்திகா பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், "நிதின்-ரித்திகா தம்பதி இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பல முறை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே செப்டம்பர் மாதம் ரித்திகா, சஹாரன்பூரில் உள்ள அவரது தாயார் பயல் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் நிதினின் குடும்பத்தார் ரித்திகா வீட்டிற்கு சென்று சமாதானம் பேசியுள்ளார். ஆனால், ரித்திகா வர மறுத்துள்ளார்.

இந்த நிலையில் நிதின் அதிகாலையில் ரித்திகா வீட்டிற்கு சென்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவர் மீதும் மாமியார் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பயல் உயிரிழந்தார். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் ரூ.500க்கு ஏலம் போகும் பெண்கள்... மாநில அரசுக்கு பாய்ந்த நோட்டீஸ்...

Last Updated : Oct 30, 2022, 9:34 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.