ETV Bharat / bharat

UP polls: 22 லட்சம் இளைஞர்களுக்கு வேலை- அகிலேஷ் வாக்குறுதி!

author img

By

Published : Jan 22, 2022, 5:02 PM IST

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்.10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐடி) 22 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

Akhilesh Yadav
Akhilesh Yadav

லக்னோ : உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ், “அகிலேஷ் யாதவ் மெயின்பூரியில் (Mainpuri) உள்ள கர்ஹால் (Karhal) சட்டப்பேரவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், “மாநிலத்தில் ஐடி துறையில் இளைஞர்களுக்கு 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றார்.

மேலும், “ஐடி துறையில் மாநிலத்தை முன்னோக்கி கொண்டு செல்ல சமாஜ்வாதி அரசு அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இங்குள்ள சக் கஜாரியா ஃபார்மில் ஹெச்சிஎல் நிறுவனம் முதலில் முதலீடு செய்தது. சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முன்னெடுத்துச் சென்றிருந்தால், லக்னோ ஐடி மையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அவ்வாறு நடக்கவில்லை, ஹெச்சிஎல் நிறுவனம் வாயிலாக கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை வாய்ப்பை பெறுகின்றனர்” என்றார்.

அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதி, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் மெயின்பூரி நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் 2012-17ஆம் ஆண்டு வரை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

இந்த மாநிலத்தில் முதல்கட்டமாக வாக்குப்பதிவு பிப்.10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க : UP polls: பின்வாங்கும் மாயாவதி, முன்னேறும் அகிலேஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.