லக்னோ: இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்றுப் பரவலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், மத்திய அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், முகக்கவசம் அணியாமல் சென்றதால் காவல்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். ஏற்கனவே முகக்கவசம் இன்றி சென்றதால் அவருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் பேசுகையில், தேவரியா மாவட்டம் பாரியார்பூரில் வசித்து வருபவர் அமீர்ஜித் யாதவ். இவர் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களிலும் முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றி வந்துள்ளார்.
தொடர்ந்து இவர் 19ஆம் தேதியும் முகக் கவசம் அணியாமல் சென்றதால் காவல்துறையினர் அவருக்கு எச்சரிக்கை விடுத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். முதல் இரண்டு முறை அவரை எச்சரித்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. அதனால் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.