லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் கோட்வாலி இக்லாஸ் பகுதியில் உள்ள ஹஸ்தாபூர் கிராமத்தில் முன்னி தேவி என்பவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர் மீதும் இவருடைய வீட்டார் மீதும் பெண்களை துன்புறுத்தியதாக, பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் முன்னி தேவி குடும்பத்தார், இது பொய்வழக்கு என்றும் தங்களை பழிவாங்கும் நோக்குடன் காவல்துறை செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, தங்களின் குடும்பத்தாருக்கு கருணைக்கொலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
இதனிடையே கிராம பஞ்சாயத்தில் வைத்து இப்பிரச்னைக்கான கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால், இதில் தலையிட்ட காவல்துறையினர், குடும்பத்தாருக்கான நீதியை தாங்கள் (காவல்துறை) வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். மேலும் பஞ்சாயத்தை கலைத்த காவல்துறையினர், பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தீண்டாமைச்சுவரை அகற்றிய அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுப்பு - கிராம மக்கள் வாக்குவாதம்