உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரில் ராணுவ கர்னல் ஒருவரை அவரது நண்பர் இரவு உணவிற்காக வீட்டிற்கு அழைத்துள்ளார். அதனடிப்படையில், ராணுவ கர்னல் அவரது நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, நண்பருக்கு ராணுவ கர்னல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அருந்த வைத்துள்ளார்.
பின்னர் நண்பரின் மனைவியை கர்னல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து கர்னலின் நண்பர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில், கர்னல் அவரது நண்பரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து, கர்னலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்!