ETV Bharat / bharat

திருமணமான முன்னாள் காதலியை கடத்திய பாஜக பிரமுகர் - சினிமா பாணியில் சம்பவம்! - பெண் கடத்தல்

உத்தரப்பிரதேசத்தில் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் காதலியை பாஜக பிரமுகர் கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BJP l
BJP l
author img

By

Published : Feb 8, 2023, 9:49 PM IST

பஸ்தி: உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தில், திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் காரில் மாமியார் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். கோட்வா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மற்றொரு கார் அவர்களை வழிமறித்தது. பாஜக கொடி பொருத்தப்பட்ட அந்த காரிலிருந்து இறங்கிய 6 நபர்கள், கணவருடன் சென்று கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் ரமேஷும் கடத்தப்பட்ட பெண்ணும் முன்னாள் காதலர்கள் என்று தெரியவந்தது. இதுகுறித்து அப்பெண்ணின் கணவரிடம் கேட்டபோது, தங்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்றும், மனைவியின் காதல் குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாஜக பிரமுகர் ரமேஷை கண்டுபிடித்த போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கடத்தப்பட்ட பெண்ணிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பெண்ணின் வாக்கு மூலத்தை வைத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Propose Day: உங்கள் அன்புக்குரியவர்களிடம் இப்படி ப்ரொப்போஸ் பண்ணுங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.