ETV Bharat / bharat

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் ஆத்திரமடைந்த அகிலேஷ் யாதவ் - சமாதானப்படுத்திய யோகி!

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் ஆத்திரமடைந்த  அகிலேஷ் யாதவ் - சமாதனப்படுத்திய யோகி!

author img

By

Published : May 26, 2022, 1:19 PM IST

Updated : May 26, 2022, 3:33 PM IST

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான நேற்று (மே 25) எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவிற்கும், உ.பியின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றி இறுதியில் பெரும் அமளி உண்டானது. பின்னர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசி வாக்குவாதத்தை முடித்து வைத்தார்.

சட்டப்பேரவையில் பேசிய அகிலேஷ் சமாஜ்வாதி கட்சியின் பெருமையைக் கூறினார். மேலும் பாஜகவை அவர் சாடினார். முன்னதாக கேசவ் பேசுகையில், அகிலேஷை உனது தந்தையின் பணத்தில் வாழ்ந்தாயா? என அவமானப்படுத்தும் விதமாகப் பேசினார். இதனையடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.

அமளியைத் தொடர்ந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இருவரையும் சமாதானப்படுத்தினார்.

இதையும் படிங்க:இயல்பு நிலைக்கு திரும்பிய அமலாபுரம்!

Last Updated : May 26, 2022, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.