லக்னோ (உத்தரப்பிரதேசம்): மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் 70 வயதான பிரபல மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கடந்த ஜனவரி மாதம் நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதையடுத்து 40 வயது மதிக்கத்தக்க கிருஷ்ண சர்மா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார்.
மருத்துவரும் அந்த பெண்ணிடம் வாட்ஸ்ஆப்பில் பேசத் தொடங்கியுள்ளார். கிருஷ்ண சர்மா தான் விவாகரத்து பெற்றதாகவும், புளோரிடாவில் மியாமி பகுதியில் வசித்து வருவதாகவும், கார்கோ கப்பலில் மரைன் இன்ஜினியராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.
மேலும், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மும்பை துறைமுகத்திற்கு வந்து, அங்கிருந்து லக்னோ வருவதாகவும் கிருஷ்ணா மருத்துவரிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் வாட்ஸ்ஆப்பில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர் இந்நிலையில், கிருஷ்ணா தென்னாப்பிரிக்காவில் இருந்து 7 லட்சம் டாலர் மதிப்புள்ள தங்கம் வாங்கி வந்ததாகவும், அதை கூரியர் மூலம் அனுப்பி வைப்பதாகவும் மருத்துவரிடம் கூறியுள்ளார்.
அதேபோல் கூரியர் சர்வீஸ் நிறுவனமும் குறுஞ்செய்தி, இமெயில் மூலம் மருத்துவரைத் தொடர்பு கொண்டு சுங்க வரி எனப் பல காரணங்கள் கூறி 1.80 கோடி ரூபாய் செலுத்துமாறு கூறியுள்ளது. மருத்துவரும் இதை நம்பி 1.80 கோடி ரூபாய் செலுத்தியதையடுத்து, கிருஷ்ணா சர்மா தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மருத்தவர் லக்னோ சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் அரசு மருத்துவர் என்று கூறி கூகிள் பே மூலம் பணம் கேட்கும் நபர்