ETV Bharat / bharat

மிட்டாய் தருவதாக 4 வயது சிறுமி இருமுறை பாலியல் வன்கொடுமை - 16 வயது சிறுவன் கொடூரச் செயல்! - மிட்டாய் தருவதாக 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

விளையாட்டிக் கொண்டு இருந்த 4 வயது சிறுமிக்கு மிட்டாய் தருவதாக கூறி கடத்தி 16 வயது சிறுவன் 2 முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
author img

By

Published : Mar 11, 2023, 8:37 AM IST

குஷிநகர்: உத்தரபிரதேசத்தில் மிட்டாய் தருவதாக கூறி 4 வயது சிறுமியை கடத்திச் சென்று 16 வயது சிறுவன் இரு முறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறி உள்ளது. குஷிநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. சிறுமி தன் உறவினர்கள் மட்டும் நண்பர்களுடன் சேர்ந்து தன் வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்து உள்ளது.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சிறுமியை அழைத்து மிட்டாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக சிறுமியின் அழுகை மற்றும் உடல் மற்றும் ஆடையில் இருந்த காயங்கள் மற்றும் ரத்தக் கரைகளை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.

சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்று பரிசோதனை நடத்திய போது பேரதிர்ச்சி இடியாய் அவர்களது தலையில் வந்து விழுந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர் துடிதுடித்து போயினர். மருத்துவமனையில் ஊருக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் இது தொடர்பாக கிராம நிர்வாகிகள் மட்டும் பஞ்சாயத்துதாரர்களிடம் முறையிட்டு உள்ளனர்.

மேலும், 16 வயது சிறுவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்த நிலையில், சிறுவனின் உறவினர்கள் உள்ளிட்டோர் சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது, மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கூடாது என கிராம பஞ்சாயத்து தாரர்கள் சிறுமியின் பெற்றோரை நிர்பந்தித்தாக கூறப்படுகிறது.

பிரச்சினையை போலீஸ் நிலையம் வரை கொண்டு செல்ல முடியாமல் சிறுமியின் பெற்றோர் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியை அதே சிறுவன் மீண்டும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த முறை சிறுமியின் மருத்துவச் செலவுகளுக்கு பணம் தருவதாகவும் போலீசிடம் புகார் அளிக்க வேண்டாம் என 16 வயது சிறுவனின் உறவினர்கள் கூறியதாக சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர். இருப்பினும் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், சிறுமியின் பெற்றோர் உள்பட இரு தரப்பினரையும் அழைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாவல் ஜெய்ஸ்வால் தெரிவித்து உள்ளார். உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன.

இதையும் படிங்க: லாரியை முந்தும் முயற்சியில் தோல்வி - கோர விபத்தில் சிறுமி உள்பட 5 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.