ETV Bharat / bharat

கங்கையில் மிதக்கும் சடலங்கள்: வைரலாகும் வீடியோவிற்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு

author img

By

Published : May 31, 2021, 6:22 PM IST

லக்னோ: கங்கை நதிக்கரையோரம் மணலில் புதைக்கப்பட்ட சடலங்கள், நீரில் அடித்துச் செல்லப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் சூழ்நிலையில், அவ்வாறு எந்த சடலங்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்படவில்லை என உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Bodies found floating in Ganga
Bodies found floating in Ganga

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கங்கை கரையோரத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டது சில நாள்களுக்கு முன்னர் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது, கங்கை நதியில் நீர்வரத்து அதிகமாகியுள்ள நிலையில், நதிக்கரையோரம் புதைக்கப்பட்ட உடல்கள் நீரில் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இது தொடர்பாக உள்ளூர்வாசிகளிடம் கேட்டபோது, நதிக்கரைக்கு அருகில் புதைக்கப்பட்ட உடல்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர். இச்சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புனித நதியில் மிதக்கும் சடலங்கள்

இதற்கிடையே, உன்னாவ் மாவட்ட நிர்வாகம், கங்கை நதியில் சடலங்கள் ஏதும் மிதக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. உன்னாவ் மாவட்ட நீதிபதி தயாசங்கர் பதாக், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அங்கு சடலங்கள் ஏதும் மிதக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கங்கை கரையோரம் புதைக்கப்பட்டுள்ள சலடங்கள்: கோவிட் அச்சத்தில் உள்ளூர்வாசிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.