பாகல்பூர்: பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உயரம் குறைந்த ஆணுக்கும், உயரம் குறைந்த பெண்ணுக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று (மே 5) நடைபெற்று முடிந்தது.
நவ்காச்சியா அபியா பஜாரில் வசிக்கும் கிஷோரி மண்டல் என்பவரின் மகள் மம்தா குமாரி (24) என்பவருக்கும், மசாருவில் வசிக்கும் பிந்தேஸ்வரி மண்டல் என்பவரின் மகன் முன்னா பார்தி (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணமகள் மம்தா குமாரி 34 இஞ்ச் உயரம், அதாவது 2.86 அடி. மணமகன் முன்னா பார்தி 36 இஞ்ச் உயரம், மூன்று அடி.
இவர்களது திருமணம் நவ்காச்சியா, கோபால்பூர் தொகுதியில் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. உறவினர்கள், ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நண்பர்கள் மணமக்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
மணமகளின் சகோதரர் சோட்டு சாலியா கூறும்போது, “ நான் சர்க்கஸில் வேலை செய்து வருகிறேன். அங்குதான் முன்னாவைப் பார்த்தேன். பின் என் அக்கா மம்தா குமாரி குறித்து தெரிவித்தேன். அவர்களுக்கும் பிடித்தது. அதன் பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது" என்றார்.
இதையும் படிங்க: பைக்குகளின் ராஜா.. வெளிநாட்டவர்கள் வியக்கும் புதிய தொழில்நுட்பம்!