ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் இன்று(ஜூலை 7) மாலை நடைபெற்றது. இதில் புதிதாக 43 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
அதேவேளை அமைச்சர் பதவி வகித்த 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் மூத்த அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் அடக்கம்.
ராஜினாமா செய்தவர்களின் பட்டியல்
- ரவிசங்கர் பிரசாத்
- ஹர்ஷ் வர்தன்
- பிரகாஷ் ஜவடேகர்
- சதானந்தா கவுடா
- தவார்சந்திர கெலாட்
- ரமேஷ் பொக்ரியால்
- சந்தோஷ் குமார் கங்குவார்
- பபுல் சுப்ரியோ
- சஞ்சய் சாம்ரோ
- ரதன் லால் கட்டாரியா
- பிரதாப் சந்திர சாரங்கி
- சுஷ்ரி தேபாஸ்ரீ சவுத்ரி
புதிய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பின் ஒன்றிய அமைச்சரவையின் பலம் 54இல் இருந்து 78ஆக உயர்ந்துள்ளது.