ஜோத்பூர்: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல்லே இரானிக்கு நாளை (பிப்.9) திருமணம் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிம்ஷர் கோட்டையில் நடைபெற உள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகள் நேற்று (பிப்.7) முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கணவர் ஜுபின் இரானி ஜோத்பூர் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது பேசிய அவர், “செவ்வாய்க்கிழமையே (பிப்.7) எனது மனைவி வர வேண்டி இருந்தது. இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் புதன்கிழமை (பிப்.8) வருவார்” என்றார்.
கடந்த 2021 டிசம்பரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல்லே இரானிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த அர்ஜுன் பால்லா என்பவருக்கும் அதே கிம்ஷர் கோட்டையில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வழக்குரைஞரான ஷனெல்லே இராணி, மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு, வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் எல்எல்எம் பட்டம் பெற்றுள்ளார். அதேபோல் எம்பிஏ பட்டதாரியான அர்ஜூன் பால்லா, கனடாவில் வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: அதானி விவகாரத்தில் ஒற்றுமை.. குடியரசு தலைவர் தீர்மானத்தில் வேற்றுமை.. எதிர்க்கட்சிகள் பிளவு.?