ETV Bharat / bharat

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வசமிருந்த சட்டத்துறை பறிப்பு; புவி அறிவியல் துறை வழங்கல் - Union Minister Kiren Rijiju stripped of his post

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் மக்களவை எம்.பி. கிரண் ரிஜிஜூ, வசம் இருந்த சட்டத்துறை பறிக்கப்பட்டு, அவருக்கு, புவி அறிவியல் துறை கொடுக்கப்பட்டுள்ளது.

Union Minister Kiran Rijiju's law department confiscation; geoscience department provision

author img

By

Published : May 18, 2023, 11:01 AM IST

Updated : May 18, 2023, 3:41 PM IST

டெல்லி: மத்திய சட்டத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூவின் பதவி பறிக்கப்பட்டு,அவருக்கு வேறு துறையான புவி அறிவியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவரது சட்டத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சரான அர்ஜூன் ராம் மேக்வாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் புவி அறிவியல் துறையின் அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அதேபோல்,மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சட்டத்துறையினை கூடுதலாகப் பார்ப்பார் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிரண் ரிஜிஜூ மத்திய அமைச்சகத்தையும், உச்ச நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்ற கொலீஜியத்தையும் பொதுவெளியில் விமர்சித்தநிலையில், இந்த முடிவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, குடியரசுத்தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ''குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி, மத்திய அமைச்சர்கள் குழுவில் உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை மறு ஒதுக்கீடு செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் குழுவில் உள்ள அமைச்சர்களிடையே இலாகாக்களை மறுஒதுக்கீடு செய்வதில் இந்தியக் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார். அதன்படி, புவி அறிவியல் துறை கிரண் ரிஜிஜுவுக்கு ஒதுக்கப்படும். அர்ஜுன் ராம் மேக்வால், (இணை அமைச்சர்), ஸ்ரீ கிரண் ரிஜிஜுவுக்குப் பதிலாக, தற்போதுள்ள இலாகாக்களுக்குப் பதிலாக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சராக சுதந்திரமான பொறுப்புடன் செயல்படுவார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற துறைமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ரிஜிஜூ நீதித்துறை தொடர்பாக பொதுவெளியில்பேசி சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் ரிஜிஜூவை நீக்கும் முடிவை பிரதமர் மோடி எடுத்ததாக பாஜக வட்டாரங்கள் ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவித்தன.

முன்னதாக, ரிஜிஜு சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். அதில், '' சில ஓய்வுபெற்ற நீதிபதிகள் பொது களத்தில் தங்களின் தனிப்பட்ட விவகாரங்களுக்காக, இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதியாக உள்ளனர். நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் பற்றிய புகார்களை நீதித் துறை பெறுகிறது. ஆனால் அது பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது'' என்று அவர் கூறினார்.

இக்கருத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 300 வழக்கறிஞர்கள் ஒரு திறந்த கடிதம் மூலம் அமைச்சரின் கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அப்போது அக்கடிதத்தில் “சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த நீதித்துறையினர் மீதான தேசவிரோத குற்றச்சாட்டுகள், அவர்களுக்கு எதிரான பழிவாங்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இது, நமது நாட்டைப் பற்றிய பார்வையினை குறைக்கும் வகையில் உள்ளது’’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளும் பாஜக தலைமையிலான மத்திய அரசை வளைத்துவிட்டன. “ஒரு சட்ட அமைச்சர் சட்ட விரோதமாகப் பேசுகிறார். அநீதியை பிரசாரம் செய்கிறார், நீதி அமைச்சர். இது பேச்சுக்குப் பிறகு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என்றால் என்ன?" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் ஜவஹர் சர்கார் கூறுகையில், “ஆதாரம் கொடுங்கள். அச்சுறுத்த வேண்டாம். நீங்கள் இதற்கு உரிய விலை கொடுக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை; இந்து மகாசபை ஆங்கிலேயர்களை ஆதரித்தது. இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதுபோல், இந்தியாவுக்கு எதிரான அறிவை எங்களுக்கு வழங்காதே!’’ எனத்தெரிவித்தார்.

மோடி அரசின் முதல் ஆட்சியில் ரிஜிஜு மத்திய உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் இரண்டாவது ஆட்சியில் ரிஜிஜு விளையாட்டுத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆயுஷ் அமைச்சகத்தின் தற்காலிகப் பொறுப்பு வழங்கப்படுவதற்கு முன்பு அவர் சிறுபான்மை விவகாரங்களுக்கான மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.

Last Updated : May 18, 2023, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.