மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அம்மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதி உறுப்பினரான இவர் டோலி குங்கே சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகவும் களம் காண்கிறார்.
இவருக்கு தற்போது கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்தாண்டு இவருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தன்னால் தேர்தல் களத்தில் நேரடியாக செயல்பட முடியாது எனவும், அதேவேளை மன ரீதியாக பாஜக தொண்டர்களுடன் நான் நிற்கிறேன் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சரத் பவாருக்கு மேலும் ஒரு மருத்துவ சிகிச்சை மருத்துவமனையில் அனுமதி