கரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன. கரோனா தடுப்பு மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஏப்.24) உயர் மட்டக்குழு ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த ஆலோசனையின்போது, ரெம்டெசிவர் மருந்து, அதனைத் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்ததை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
மேலும், அதைப் போல ஆக்ஸிஜன் மற்றும் கரோனா தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறை கருத்தில் கொண்டு, ஆக்ஸிஜன் தயாரிப்பு, சேமிப்பு தொடர்பான உபகரணங்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் கலால் வரி, சுகாதார செஸ் வரி உள்ளிட்டவை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.