ஹைதராபாத்: முலுகு மாவட்டத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயிலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் அமைந்துள்ளது ராமப்பா கோயில். வரலாற்று சிறப்பு மிக்க இந்தக் கோயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த கோயில்களில் இதுவும் ஒன்று. இதற்கு ருத்ரேஸ்வரர் ஆலயம் என்றொரு பெயர் உள்ளது.
தெலுங்கு மாவட்டங்களில் கட்டிடக் கலைக்காக சர்வதேச அங்கீகாரம் பெறும் முதல் கட்டிடம் ராமப்பா கோயில்தான். சீனாவில் நடைபெற்ற உலக பாரம்பரிய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துப்பாக்கியுடன் செல்பி எடுக்கும் ஆசையில் உயிரைவிட்ட இளம்பெண்