ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் நேற்று முன்தினம் (ஆக.15) கைப்பற்றினர். அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவப் படைகளை திரும்பப் பெற்றதை அடுத்து, ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபன்கள் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். அங்கு பதற்றமான சூழல் நிலவி விருகிறது.
இந்த நிலையில் இன்று ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை கூட்டத்தை நியூயார்க்கில் நடத்தியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா சார்பில் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
பெண்கள், குழந்தைகள் மீதான மனித உரிமை மீறல்கள்
ஆப்கானிஸ்தான் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டத்தில் பேசிய அவர், "ஆப்கான் நிலவரத்தை கண்காணித்துவருகிறோம். அந்நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆப்கானில் இருந்து வரும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவு தர வேண்டும்.
அவர்கள் நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அங்குள்ள பெண்கள், குழந்தைகள் மீதான மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை