ETV Bharat / bharat

G20 மாநாடு: உலக பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த முன்வந்த இங்கிலாந்து பிரதமர்!

UK PM announces $2 billion to GCF: G20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், காலநிலை மாற்றத்தை சரி செய்ய பசுமை காலநிலை நிதி (Green Climate Fund) 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

UK PM Rishi Sunak announces $2 billion to Green Climate Fund
உலக பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த முன்வந்த இங்கிலாந்து பிரதமர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 3:49 PM IST

டெல்லி: G20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனை சரி செய்ய பசுமை காலநிலை நிதி (Green Climate Fund) $2 பில்லியன் டாலர் வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

COP15 கோபன்ஹேகன் உடன்படிக்கையைத் தொடர்ந்து 194 நாடுகள் ஒன்று இணைந்து பசுமை காலநிலை நிதியை (Green Climate Fund) உருவாக்கியது. இதற்காக தற்போது இங்கிலாந்து £1.62 பில்லியன் ($2 பில்லியன்) அளிக்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் இந்தியாவில் தற்போது தெரிவித்துள்ளனர்.

  • We're delivering on our commitment to help the world deal with climate change:

    🍃 Provide $2bn to the Green Climate Fund
    📈 Decarbonising our own economy
    🌍 Supporting the world’s most vulnerable to deal with the impact of climate change

    — UK Prime Minister (@10DowningStreet) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் G20 மாநாட்டில் ஐக்கிய அரபு நாடுகளில் COP28 காலநிலை குறித்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவவும் தனது அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜி20 விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமெரிக்க அதிபருடன் கலந்துரையாடல்!

இங்கிலாந்து அரசு தங்களது நிதி அறிவிப்பின் படி 2020 முதல் 2023 வரையில் தங்களின் நிதி ஒதுக்கீட்டை விட 2024 முதல் 2027 வரையிலான நிதி ஒதுக்கீடு 12.7 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

பசுமை காலநிலை நிதியானது (GCF) 2010ஆம் ஆண்டு கான்கன் ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. பசுமை காலநிலை நிதியானது காலநிலை மாற்றம் மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் படி ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டிற்கு நிதி ஆதாரமாக செயல்படுகிறது. இது இரண்டு முதன்மை நோக்கங்களை கொண்டுள்ளது. அதன்படி, உலகளாவிய சமூகத்திற்கு நம்மை உருவாக்கவும் மற்றும் இணைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ள இந்த நிதியுதவியானது. சர்வதேச காலநிலை நிதியுதவியில், தோராயமாக £11.6 பில்லியன் ($4.46 பில்லியன்) வழங்குவதற்கான முதல் பகுதியாக இருக்கும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் குடும்பத்துடன் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.