லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று (செப்.10) நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது தங்களது பாராளுமன்றத்தை பெய்ஜிங்கிற்காக உளவு பாரத்ததாக சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் ஏற்றக்கொள்ள முடியாதது என்று சீனா பிரதமரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று நடத்த ஜி20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் டெல்லியில் உள்ள பிரிட்டிஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சீனாவின் பிரதமர் எல்ஐ கியாங் சந்திப்பின் போது எங்கள் பாராளுமன்றத்தில் தலையீடு குறித்து வலுவான விவாதத்தை வெளிப்படுத்தினேன். மேலும் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் இரண்டு நபர்கள் இங்கிலாந்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 20 வயது மற்றும் 30 வயது என இருவர் ரகசிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பின் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பல முக்கிய அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய வகையில் அனுமதி சீட்டை இருவரும் வைத்து இருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த அனுமதி சீட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சீனாவில் வளர்ந்து வரும் சக்தி உலக அளவில் அனைவருக்கும் சாவல் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஹாங்காங் விவகாரம், பொருளாதார சூழ்ச்சி, பெய்ஜிங்கின் சிவில் உரிமைகள் மீதான அடக்குமுறை போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக பிரிட்டன் மற்றும் சீனா இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இங்கிலாந்து பொருளாதாரத்தில் சீன நிறுவனங்கள் பங்குகள் குறித்தும் சில முடிவுகள் எடுக்கப்பட்டு இருந்தன.
இங்கிலாந்து கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவர் இயன் டங்கன் ஸ்மித் மார்ச் மாதக் கைது செய்யப்பட்டார். சீனாவின் உளவு நடவடிக்கைகள் எதிராக இங்கிலாந்து உளவு சேவை எப்போதும் விழிப்புடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: G20 மாநாட்டின் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!
எம்ஜ5 உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவர் கென் மெக்கலம் சீன செயல்பாடுகள் இங்கிலாந்திற்கு சாவலாக உள்ளது. எனவும், எம்ஜ6 வெளிநாட்டு புலனாய்வு தலைவர் ரிச்சர்ட் மூர் சீனா உளவுத்துறை ஒரே மிக முக்கிய கவனத்தை செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பேரி கார்டினர் 2015 மற்றும் 2020க்கு இடையில் லீ-யிடம் இருந்து 500000 பவுண்டுகள் (685000 டாலர்கள்) அதிகமாக பணம் பெற்றுள்ளார். மேலும், இவரது மகன் கார்டினர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆனால், லீ மற்றும் சீன அரசாங்கம் இருவரும் தவறை மறுக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
சீனா இங்கிலாந்தின் உள்விவகாரங்களில் தலையீடுவதாக எழுந்த விமர்சனங்களுக்கு, சீனா தனது மறுப்பை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேரடியாக எனது கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பினேன் என தனது அணுகுமுறை கூறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: G20 மாநாடு: உலக பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த முன்வந்த இங்கிலாந்து பிரதமர்!